×

தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக வழக்கு: தான் குற்றம் ஏதும் இழைக்கவில்லை… டொனல்ட் டிரம்ப் முறையீடு

வாஷிங்டன்: தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தான் குற்றம் ஏதும் இழைக்கவில்லை என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு டொனல்ட் டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் நாட்டை ஏமாற்ற முயன்றது அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டிரம்ப்க்கும் எதிரான பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்த டொனல்ட் டிரம்ப் தான் குற்றம் எதுவும் இழைக்கவில்லை என்று நீதிபதி முன் கூறினார்.

சுமார் 45 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. பின்னர் வெர்ஜினியாவில் பேசிய டொனல்ட் டிரம்ப் அரசியல் எதிரியை துன்புறுத்தவே வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளால் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வுக்காக தீவிர பரப்புரையை மேற்கொண்டுள்ள டொனல்ட் டிரம்ப்க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

The post தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக வழக்கு: தான் குற்றம் ஏதும் இழைக்கவில்லை… டொனல்ட் டிரம்ப் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,Washington ,US ,President ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்